ETV Bharat / city

காவல் ஆய்வாளரின் சட்டையைப் பிடித்த ராணுவ வீரர் - சிறையில் அடைப்பு!

author img

By

Published : Jan 25, 2022, 2:12 PM IST

வேலூர் அருகே காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரின் சட்டையை பிடித்த ராணுவ வீரரை நான்கு பிரிவுகளின் கீழ் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

காவல் ஆய்வாளரின் சட்டையைப் பிடித்த ராணுவ வீரர்

வேலூர்: கம்மவான்பேட்டை அருகே மாவட்ட ஆட்சியரின் தடையை மீறி எருதுவிடும் விழா நடைபெற உள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனடிப்படையில் அப்பகுதியில் காளைகளுடன் விளையாட்டில் பங்கேற்க வரக் கூடியவர்களை தடுத்து நிறுத்தும் பணியில் நேற்று (ஜன.24) காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் வேலூர் தாலுகா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட காரமடை ஏரிக்கரை பகுதியில் வேலூர் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் நிலவழகன் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

அப்போது, கே.வி. குப்பம் அருகே உள்ள காங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரரான மோகன்ராஜ்(35) காளையுடன் கம்மவன்பெட்டை பகுதிக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். அவரை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் காவல் ஆய்வாளர் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ராணுவ வீரர் இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ராணுவ வீரர் இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்ததால் இன்ஸ்பெக்டருக்கு ராணுவ வீரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, மோகன்ராஜை காவல்துறையினர் அழைத்துச் சென்று வேலூர் தாலுகா காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் வேலூர் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் ராணுவ வீரர் மோகன் ராஜை கைது செய்து, நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்; மொழிப்போர் தியாகிகளுக்கு ஈபிஎஸ் ட்வீட்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.