வேலூர் மாவட்டம், ஊசூர் பகுதியை சேர்ந்தவர் விஜய் ராஜ் (49). இவர் ஊசூர் பிரதான சாலையில் உள்ள கிருஷ்ணா நகர்ப்பகுதியில் 'ஶ்ரீ சிவம் கிளினிக்' என்ற கிளினிக்கை நடத்தி வந்தார்.
இவர் மாற்று மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மினிற்கு வந்த தகவலின் அடிப்படையில், இன்று (ஜூன் 29) வருவாய் துறையினர், காவல் துறையினர், மருத்துவ துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று கிளினிக்கில் சோதனை செய்தனர்.
இதையடுத்து மாற்று மருத்துவம் படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்ததற்காக அவரின் கிளினிக்கிற்கு வருவாய் அலுவலர்கள் சீல் வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பிரபல வில்லன் நடிகர் மீது ஒரு கோடி ரூபாய் மோசடி புகார்'