வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூரை தனி மாவட்டமாக பிரிப்பதற்கு உறுதுணையாக இருந்ததாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸிற்கு அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ராஜா தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ், "கடந்த பத்தாண்டு ஆட்சியில் தமிழ்நாட்டில் எந்தவொரு மாவட்டத்தையும் தனியாக பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஐந்து மாவட்டங்களைப் பிரித்து அதற்கான பெருமையை பெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்க:
பாமக அலுவலகத்திற்கு தீ வைப்பு! திமுக காரணமா? போலீஸ் விசாரணை!