முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் மத்திய சிறையில் உள்ள நளினியின் விடுதலை தாமதமாவதாலும், தனது கணவர் முருகனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் பரோல் கேட்டு, அதுவும் கிடைக்காததாலும், தன்னை கருணை கொலை செய்யக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் நளினி.
இதனைத் தொடர்ந்து நவம்பர் 27ஆம் தேதி முதல் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார். நேற்று அவர் 10ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்தால் உடல்நிலை மிகவும் மோசமானது. சிறை துறை அலுவலர்கள் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதம் கைவிடவில்லை.
'என்னையும் எனது கணவரையும் கருணைக் கொலை செய்யுங்கள்' - பிரதமருக்கு நளினி கடிதம்!
இதையடுத்து நளினி கணவர் முருகனை வைத்து இன்று சிறை அலுவலர்கள் அவரிடம் பேச வைத்தனர். கணவர் முருகன் கேட்டுக்கொண்டதால் நளினி தனது உண்ணாவிரத்த்தை இன்று கைவிட்டார்.