ETV Bharat / city

"அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், இல்லையென்றால்..."- அமைச்சர் துரைமுருகன் - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வீடுகள் தோறும் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு திட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் 'அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன் பேச்சு
அமைச்சர் துரைமுருகன் பேச்சு
author img

By

Published : Dec 17, 2021, 9:04 AM IST

வேலூர்: காட்பாடியில் நேற்று (டிச 16) வீடுகள் தோறும் கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கரோனாவை சூரசம்ஹாரம் செய்ய வந்திருக்கின்றனர் நம்முடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன். இந்த திட்டத்தின் நோக்கமே 'எல்லோரும் ஊசி போட்டுக்கொள்ளுங்கள் உயிரோடு இருப்பீர்கள், இல்லை என்றால் தெய்வம் ஆகிவிடுவீர்கள்.

இந்த வியாதி வருவதற்கும் மு. க. ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கும் சரியாக இருந்தது, வேறு யாரேனும் முதலமைச்சராக ஆகி இருந்தால் இந்நேரம் தமிழ்நாட்டினுடைய ஜனத்தொகை பாதியாக ஆகியிருக்கும். கரோனா வைரஸ் தடுப்பு ஊசியை அனைவரும் தவறாமல் செலுத்தி கொண்டு தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனவும், நம்மை காப்பது மட்டுமில்லாமல் நம்மைச் சார்ந்தவர்களையும் நாம் காப்பாற்ற வேண்டும்.

அமைச்சர் துரைமுருகன் பேச்சு

கரோனா தடுப்பூசி பணிகளில் சரியான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி 100 விழுக்காடு தடுப்பூசி போட ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது கிராம ஊராட்சியில் உள்ள அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள செய்ய வேண்டும் இல்லை என்றால் அந்த ஊராட்சிமன்ற தலைவருக்கு கட்டாய விடுப்பு தரப்படும்” என்றார்.

துணிநூல் மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஆர் காந்தி, வேலூர் ,ராணிப்பேட்டை திருப்பத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களும் ஊராட்சி மன்ற தலைவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக தகுதியானவர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.