ETV Bharat / city

என் மகனை தத்து கொடுக்கிறேன்: துரைமுருகன் நெகிழ்ச்சி

வேலூர்: தன் மகனை மக்களிடம் தத்து கொடுக்கிறேன் என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

murugan
author img

By

Published : Mar 19, 2019, 4:18 PM IST

Updated : Mar 19, 2019, 4:32 PM IST

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில்,

நான் அண்ணா மற்றும் கலைஞருடன் பல மேடைகளில் பேசியுள்ளேன். கட்சியில் பல மேடைகளில் பல்வேறு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் போது சாதரணமாக பேசிவிடுவேன். இப்பொழுது எனக்கு பிறந்த மகனை மக்களிடம் அறிமுகம் செய்யும்போது சற்று பயமாக இருக்கிறது. நான் என் மகனை இத்தொகுதி மக்களிடம் தத்து கொடுக்கிறேன்.

துரைமுருகன் பேச்சு

அவரை நம்பி வாக்களியுங்கள். திமுக வெற்றி பெற்றால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் தோல் தொழிற்சாலையை தவிர்த்து மாபெரும் தொழிற்பேட்டை நிறுவப்படும். நான் என் மகனை இத்தொகுதி மக்களிடம் ஜாமின் கொடுத்து தத்து கொடுக்கின்றேன். மோடி அரசை நாட்டைவிட்டு வெளியேற்ற மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்" என்றார்.

Intro:என் மகனை ஜாமீன் கொடுத்து தங்களுக்கு தத்து கொடுக்கின்றேன், என வாணியம்பாடியில் நடைப்பெற்ற திமுக வேலூர் பாராளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் துரைமுருகன் பேச்சு.

Body:வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அறிமுக கூட்டம் நடைப்பெற்றது.

திமுக கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தன் மகனை வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக நிறுத்தியுள்ளார்.

இதனையடுத்து வாணியம்பாடியில் நடைப்பெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துரைமுருகன்

நான் அண்ணா மற்றும் கலைஞர் உடன் பல மேடைகளில் பேசியுள்ளேன், கட்சியில் பல மேடைகளில் பல்வேறு வேட்பாளர்களை அறிமுகம்படுத்தும் போது சாதரணமாக பேசிவிடுவேன், இப்பொழுது எனக்கு பிறந்த மகனை மக்களிடம் அறிமுகம் செய்யும் போது, எனக்கு சற்று பயமாக உள்ளது.

நான் என் மகனை இத்தொகுதி மக்களிடம் ஜாமீன் கொடுத்து தத்து கொடுக்கின்றேன், அவனை நம்பி மக்கள் வாக்களியுங்கள் .

திமுக வெற்றி பெற்றால் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் தோல் தொழிற்சாலையை தவிர்த்து மாபெரும் தொழிற்பேட்டை நிறுவப்படும் என உறுதியளித்தார்.

மோடி அரசை நாட்டை விட்டு வெளியேற்ற மக்கள் சிந்தித்து வாக்களிக்கவேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பேசிய வேலூர் மாவட்ட பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்த் நான் வெற்றி பெற்றால் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் தீர்கப்பட்டு திறமை வாய்ந்த ஆட்சியாக திகழ்ந்து தமிழ்நாட்டில் முன்னோடி மாவட்டமாக மாறும் என உறுதியளித்தார்.

Conclusion:மேலும் இக் கூட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Last Updated : Mar 19, 2019, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.