வேலூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அந்த வகையில், நேற்று (ஜூலை 26) புதிதாக 204 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 156ஆக உயர்ந்துள்ளது. இதுவரை வேலூர் தாலுக்காவில் மட்டுமே தொற்று பாதித்தவர்கள் அதிகம் இருந்த நிலையில், அண்மைக்காலமாக குடியாத்தம், பேர்ணாம்பட்டு, பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளிலும் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
கடந்த மே மாதம் 31ஆம் தேதி வரை 43 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூன், ஜூலை மாதங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று வேகமாகப் பரவியுள்ளது.
நேற்று வெளியான பட்டியலில் வேலூர் அரசு மருத்துவமனை, சிஎம்சி மருத்துவமனைகளில் பணிபுரிந்தவர்கள், காட்பாடி ரயில்வே குடியிருப்பு, வேலூர் காவலர் குடியிருப்பு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்து 973க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 25) வரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அதிகப்படியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சையில் இருந்த மூதாட்டி தப்பியோட்டம்