தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரங்கன் (58). இவர் கடந்த 2015ஆம் ஆண்டு போக்சோ வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். ரங்கன் கடந்த மே13ஆம் தேதி மூளைக் காய்ச்சல் காரணமாக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (மே.18) உயிரிழந்தார். இது குறித்து பாகாயம் காவல்துறையினர், "வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உடற்கூராவுக்கு பின்னர் அவரது உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:சித்த மருத்துவம் பயன்படுத்துவது வருத்தம் அளிக்கிறது - தர்மபுரி திமுக எம்.பி