வேலுார் மாவட்டத்தில் உள்ள திருப்பத்துார் அருகே ஆம்பூரில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து எருது விடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து ஏராளமான காளைகள் பங்கேற்றன.
மேலும் குறைந்த தொலைவில் பந்தய துாரத்தை எட்டிய காளைக்கு முதல் பரிசாக 55 ஆயிரத்து 555 ரூபாயும், இரண்டாம் பரிசாக 44 ஆயிரத்து 444 ரூபாயும், மூன்றாம் பரிசாக 33 ஆயிரத்து 333 ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் காளை முட்டியதில் ஊர்காவல் படையை சேர்ந்த காவலருக்கு கால் முறிவு ஏற்பட்டது.
10க்கும் மேற்பட்டோருக்கு காயங்கள் ஏற்பட்டன. இந்த விழாவை காண பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிக்க:நாட்றம்பள்ளி எருது விடும் திருவிழா - 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு