ETV Bharat / city

வேலூர் வன்றந்தாங்கலில் எருதுவிடும் விழா! - Bull race in Vandrandhangal

வேலூர்: காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியில் நடைபெற்ற எருதுவிடும் விழாவில் மாவட்டத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாடுகள் 5000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

எருதுவிடும் விழா
எருதுவிடும் விழா
author img

By

Published : Jan 29, 2021, 10:03 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் பகுதியில் இன்று (ஜன. 29) 61ஆம் ஆண்டு ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது.

சென்ற வருடம் கரோனா தொற்றால் தடைசெய்யப்பட்ட எருதுவிடும் விழாவிற்கு இந்த வருடம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 14ஆம் தேதிமுதல் பிப்ரவரி 26ஆம் தேதிவரை வேலூர் மாவட்டத்தில் சுமார் 45 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டது.

பார்வையாளர்கள் 5000-க்கும் மேற்பட்டோர் காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியில் குவிந்தனர். 200-க்கும் மேற்பட்ட காளைகள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து வாடிவாசல் வழியாகச் சீறிப் பாய்ந்து ஓடியது.

இதில் குறுகிய நேரத்தில் வேகமாக இலக்கை அடைந்து போட்டியில் வெற்றிபெறும் காளைக்கு முதற்பரிசாக 70,077 ரூபாயும் இரண்டாம் பரிசாக 55,055 ரூபாயும் மூன்றாம் பரிசாக 40,044 ரூபாயும் கடைசி பரிசாக 3,201ரூபாயும் என 61 பரிசுகள் வழங்கப்பட்டன.

காலை 10 மணிக்கு காளைகளைத் துன்புறுத்த மாட்டோம், பாதுகாப்பாக விழாவை நடத்துவோம் என்ற உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்வினையொட்டி 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சி அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.