வேலூரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் ராகவன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறியதாவது; மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் 130 கோடி மக்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என பிரதமரும், உள்துறை அமைச்சரும் கூறியுள்ளனர்.
ஆனாலும் தமிழ்நாட்டில் திமுக சில்லறை கட்சிகளுடன் சேர்ந்து போராட்டத்தை தூண்டிவிடுகிறது. இஸ்லாமிய அமைப்புகளும் தங்களுக்குள் உள்ள பிரிவுகளில் யார் பெரியவர் என்பதில் போட்டிப்போட்டுக் கொள்வதால் இந்த போராட்டம் பெரிதுபடுத்தப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சரும் சட்டப்பேரவையில் இந்த போராட்டத்தால் யாருக்கு பாதிப்பு எனக் கூற வேண்டுமென சவால்விட்டும், ஸ்டாலின் அதனைச் சந்திக்க தயாராக இல்லை.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை உருவாக்கி, அதன் மூலம் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட ஸ்டாலின் முயல்கிறார். பாஜக இதனை வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.