ETV Bharat / city

கொலை - கொள்ளை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை! - vellore accused double life imprisonment

வேலூர்: நகைக்காக கணவன் மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து, வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

accused-got-double-life-imprisonment
author img

By

Published : Nov 8, 2019, 11:08 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (75). அவரது மனைவி மீனா (55). அவர்களுக்கு மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் வீட்டில் ராஜேந்திரன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 3.01.2015 அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் (49) என்ற நபர், ராஜேந்திரன் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது வீட்டில் ராஜேந்திரன், மீனா இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். மீனாவின் கழுத்திலிருந்த தாலி, கம்மல் ஆகியவற்றை யாருக்கும் தெரியாமல் எடுக்க முயன்றபோது, ராஜேந்திரன் சத்தம்கேட்டு எழுந்துள்ளார். இதையடுத்து அவர் தலைமீது சக்திவேல் கட்டையைக் கொண்டு ஓங்கி அடித்துள்ளார்.

இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு மீனாவும் கண் விழித்துள்ளார். உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாவின் தலையிலும் சக்திவேல் கட்டையைக் கொண்டு பலமாக அடித்ததில் இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் குற்றவாளி சக்திவேலுக்கு இரட்டை ஆயுள்

இரண்டு உயிரைக் கொன்ற பிறகும் தனது கொள்ளை வெறி அடங்காத சக்திவேல், மீனாவின் கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலி, கம்மல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அதன் பின்பு இந்த கொள்ளை-கொலை சம்பவம் குறித்து திருப்பத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 07.01.2015 அன்று ஆலங்காயம் பகுதியில் சக்திவேலைக் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று மாவட்ட மகிளா நீதிபதி எம்.செல்வம், குற்றவாளி சக்திவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனையுடன் ரூ. 5,000 அபராதமும் விதித்து பரபரப்பான தீர்ப்பு அளித்து உத்தர விட்டார்.

மேலும் படிக்க: பனியன் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை, கொலையாளி யார்? - விசாரணையில் காவல் துறை!

Intro:வேலூர் மாவட்டம்

நகைக்காக கணவன் மனைவியை அடித்துக் கொன்ற நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்புBody:வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (75) இவரது மனைவி மீனா (55) இவர்களுக்கு மூன்று மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் அனைவரும் திருமணமாகி வெளியூரில் செட்டில் ஆகிவிட்டனர் இதனால் வீட்டில் ராஜேந்திரன் தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த 3.01.2015 அன்று இரவு அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(49) என்ற நபர் ராஜேந்திரன் வீட்டிற்குள் புகுந்து திருட முயற்சி செய்துள்ளார் அப்போது வீட்டில் ராஜேந்திரன் மற்றும் மீனா இருவரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். மீனாவின் கழுத்திலிருந்த தாலி மற்றும் கம்மல் ஆகியவற்றை திருட முயன்ற போது ராஜேந்திரன் சத்தம்கேட்டு எழுந்துள்ளார் இதையடுத்து வீட்டிலிருந்த கட்டையைக் கொண்டு ராஜேந்திரன் தலைமீது சக்திவேல் ஒங்கி அடித்துள்ளார் இதற்கிடையில் அலறல் சத்தம் கேட்டு மீனாவும் கண் விழித்துள்ளார் உடனே கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாவின் தலையிலும் சக்திவேல் கட்டையை கொண்டு பலமாக அடித்ததில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இரண்டு உயிரை கொன்ற பிறகும் தனது திருட்டு வெறி அடங்காத சக்திவேல், மீனாவின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் கம்மல் ஆகியவற்றை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். திருப்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 07.01.2015 அன்று ஆலங்காயம் பகுதியில் சக்திவேலை கைது செய்தனர் வேலூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று மாவட்ட மகிளா நிதிபதி எம்.செல்வம் பரபரப்பு தீர்ப்பு அளித்தார் அப்போது அவர் குற்றவாளி சக்திவேலுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.