வேலூர்: சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பள்ளிகொண்டா வழியாக அதிகளவில் கஞ்சா கடத்திச் செல்லப்படுவதாக சென்னை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினருக்கு(NCB) தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தடுப்பு பிரிவு காவலர்கள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆந்திராவிலிருந்து வந்த லாரியில் சோதனை நடத்தப்பட்டது. அதில், நிலக்கடலை மூட்டைகளுடன் கஞ்சா பொட்டலங்களும் இருந்தன. உடனே அவற்றை பறிமுதல் செய்த காவலர்கள் இருவரை கைது செய்தனர். லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
முதல்கட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் எடை 360 கிலோ என்பதும், கைது செய்யப்பட்டவர்கள் தேனியைச் சேர்ந்த முருகன்(36), ரமேஷ்(48) என்பது தெரியவந்துள்ளது. இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் போதை பவுடர் பறிமுதல்