வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்ததன் காரணமாக, தங்கம் நகர் பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரம் வேரோடு சாய்ந்தது. இதனால் குடியாத்தம் சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், சாலையோரம் உள்ள 15 மின்கம்பங்கள், ஒரு மின்மாற்றி பழுதானதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையின் குறுக்கே விழுந்த அரச மரத்தை அகற்றும் பணியில், சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி மற்றும் மின்சாரத் துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் - 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அதிசய மரம்!