வேலூரை அடுத்த ஊசூரில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேலூர் தொரப்பாடி ரஹீம்நகர் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் நரேஷ் (20) என்பவர் அப்பகுதியில் காரில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 10 சவரன் தங்க வளையல்கள் பறிமுதல்செய்யப்பட்டன. தொடர்ந்து பறிமுதல்செய்யப்பட்ட நகைகள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதையும் படிங்க: களைகட்டிய தேர்தல் விழா: பறக்கும் படை ஜோரு... குக்கர், தோசை தவா பறிமுதல்