ETV Bharat / city

கள்ள காதலுக்கு நீதிமன்றம் அனுமதித்ததால் தான் இது போன்று நடக்கிறது - இந்து முன்னணி மாநில தலைவர்!

திருச்சி: கள்ளக்காதல் போன்ற கலாச்சார சீர்கேடுகளுக்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது தான் இத்தகைய பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம் என்று இந்து முன்னணி மாநில தலைவர் கூறியுள்ளார்.

tri
author img

By

Published : Mar 14, 2019, 9:22 PM IST

திருச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அதில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

திருமணமாவதற்கு முன்பே பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ளலாம், கள்ளக்காதல் போன்ற கலாச்சார சீர்கேட்டிற்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது தான் இத்தகைய பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம் என்று தெரிவித்தார்.

மேலும் இந்து முன்னணி கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Intro:இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

Body:திருச்சி:
திருச்சியில் இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநிலத் தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் பாரபட்சமின்றி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்படும். திருமணமாவதற்கு முன்பே பெண்கள் உடலுறவு வைத்துக் கொள்ளலாம், கள்ளக்காதலுக்கு நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கியது போன்ற கலாச்சார சீர்கேடுகள் தான் இத்தகைய பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு காரணம்.
ஆலயங்களை பாதுகாக்க வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாட்டுப்பசு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்துக்களுக்கு சேவை மையங்கள் கல்வி நிலையங்கள் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இந்து விரோத தொலைக்காட்சி, பத்திரிகைகள் போன்றவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பயங்கரவாதம் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். ஊடக கருத்துரிமையை ஒழுங்குபடுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை இந்து முன்னணி முன் வைக்கிறது. இந்த கோரிக்கைகள் அனைத்தும் தமிழக அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சிகளுக்கு இந்து முன்னணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கும் என்றார்.

Conclusion:இந்து முன்னணி கோரிக்கைகளை ஏற்கும் அரசியல் கட்சிகளுக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என்று மாநில தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.