ETV Bharat / city

காலங்கள் மாறும்..காட்சிகள் மாறும்..திருச்சியில் சவரம் செய்யும் தன்னம்பிக்கைப் பெண் - சவர கத்தியை பதம் பாத்துவரும் திருச்சி பெண் செய்திகள்

ஆண்கள் மட்டுமே செய்துவரும் முடிதிருத்தும் தொழிலை சவாலாக ஏற்று, திருச்சியில் பெண் ஒருவர் தன்னம்பிக்கையுடன் சாதித்து வருவது பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

Trichy women run the salon shop
Trichy women run the salon shop
author img

By

Published : Feb 15, 2021, 1:05 PM IST

Updated : Feb 15, 2021, 4:49 PM IST

ஆண்களைப்போல் இயல்பாக நிறைவடைவதில்லை பெண்களின் முடிவெட்டும் படலம். தங்களது முடிகளை வெட்டிக் கொள்ளக்கூட வீட்டின் உள்ள பெரியவர்களின் அனுமதி கேட்டுதான் முடியை வெட்டும் நிலை இருக்கிறது.

அதுமட்டுமின்றி, தங்களது முடிகளை வெட்டிக்கொள்ள தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சாதாரண சலூன் கடைக்குக்கூட பெண்கள் செல்ல முடிவதில்லை. சென்றால் பொதுவெளியில் ஆயிரம் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். சலூன் கடைகளில் முடி வெட்டுதல், முகச்சவரம் செய்தல் ஆகியப் பணிகளில் ஆண்களே ஈடுபடுவதால், அது ஆண்களுக்கான இடமாக பொதுசமூகத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. சலூன் கடைகளில் பெண்கள் நுழைவதுகூட இழிவானதாகப் பார்க்கப்படுகிறது.

சவர கத்தியை பதம் பாத்துவரும் திருச்சி பெண்!

தங்கள் மகன்களுக்கு முடிவெட்ட சலூன் கடைக்கு அழைத்துவரும் பெண்கள்கூட, ஏதோ வரக்கூடாத இடத்துக்கு வந்துவிட்டதுபோல் நாற்காலியில் நிலை கொள்ளாமல் அமர்ந்திருப்பார்கள். அந்த நிலையைத் தகர்த்தெறியும் வண்ணம் ஓர் பெண் தன்னம்பிக்கையுடன் சலூன் கடை நடத்தி வருகிறார்.

திருச்சி சிந்தாமணி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரூபன் சண்முகநாதன் (40) - பெட்ரிஷியா மேரி (39) தம்பதியினர். இவர்களுக்கு ரஞ்சனி (19) என்கிற மகளும், ரஞ்சித் (17) என்ற மகனும் உள்ளனர். முடிதிருத்தும் கலைஞரான சண்முகநாதன், கடந்த 2014ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிடவே, அதிர்ச்சியில் உறைந்து போனார், பெட்ரிஷியா மேரி.

பெட்ரிஷியா மேரி குடும்பத்தார்...!
பெட்ரிஷியா மேரி குடும்பத்தார்...!

கணவரின் மரணத்துக்குப் பிறகு குழந்தைகளைப் படிக்க வைப்பதும், குடும்பத்தை நடத்துவதும் பெட்ரிஷியா மேரிக்கு சவாலாக மாறியது. பின்னர் கணவர் நிர்வகித்து வந்த சலூன் கடைக்கு சம்பளத்துக்கு ஆள் தேடியபோது, யாரும் முன்வராததால், தானே சலூன் கடையை நடத்த முன்வந்தார், பெட்ரிஷியா.

தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக முடி திருத்தும் தொழிலில் ஈடுபட்டுவரும் இவரிடம் ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் தற்போது முடிவெட்டுகின்றனர். சவரம் செய்துகொள்கின்றனர். இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர், தற்போது இவருக்கு வாடிக்கையாளராகவும் உள்ளனர். கணவனை இழந்த பெட்ரிஷியா மேரி, வறுமையிலும் தன்னம்பிக்கையுடன் சலூன் கடை தொடங்கி நடத்தி வருவது அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது.

காலங்கள் மாறும்..காட்சிகள் மாறும்..திருச்சியில் சவரம் செய்யும் தன்னம்பிக்கைப் பெண்

இதுகுறித்து பெட்ரிஷியா மேரி கூறுகையில், "நான் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறேன். எனது கணவர் விபத்தில் இறந்துவிட்டதால், நான் இந்த கடையை நிர்வகித்து வருகிறேன். என் கணவர் இறந்தவுடன் வேலைக்கு ஆட்கள் போட பெரிதும் முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை. இதனால் நீண்ட நாட்களாக கடையைப் பூட்டி போடும் நிலை உருவானது. இதனால் இந்தக் கடையை எடுத்து நானே நிர்வகித்து வருகிறேன்.

ஆரம்ப நாட்களில் இந்தத் தொழில் செய்ய எனக்கு மிகவும் பயமாகவும், படபடப்பாகவும் இருந்தது. இது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. இந்த வேலையை மேற்கொள்ள எனக்கு எதிர்ப்பு அதிகளவில் இருந்தது. வாடிக்கையாளர்கள் சிலர் என்னை ஏளனமாகவும், கிண்டலாகவும் பேசியுள்ளனர்.

சிலர் கடைக்கு வந்து நீங்கள் தான் வேலை செய்யப் போகிறீர்களா? என்று கேட்டு இறங்கி சென்ற சம்பவங்களும் நடந்துள்ளன. இப்போது எனக்கு ஓரளவுக்கு தைரியம் வந்துவிட்டது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் எனக்குத் தைரியம் கொடுத்து வருகின்றனர்.

எனது கணவர் இறந்த நாள் முதல் இத்தொழிலில் வரும் வருமானத்தைக் கொண்டு, எனது பிள்ளைகளைப் படிக்க வைத்து வருகிறேன். தொடர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடுவேன்" என தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார்.

பின்னர் கடைக்கு வந்த வாடிக்கையாளர் சேகர் கூறுகையில், "நான் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, இந்தக் கடையில் தான் முடிதிருத்தம் செய்து வருகிறேன். ஆரம்ப நாட்களில் இந்த பெண் சரியான முறையில் முடி திருத்துவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அவர் தற்போது சரியான முறையில் சிறப்பாக முடிதிருத்தி வருகிறார்" என்றார்.

சமூக ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மேம்பாடு அடைந்த பெண்களால் தான் சாதிக்க முடியும் என இல்லாமல், ஆண் துணை இல்லாமலும் குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு சாதிக்கலாம் என்பதற்கு பெட்ரிஷியா மேரி ஓர் முன்னுதாரணம்.

கணவனை இழந்தாலும், தன்னம்பிக்கையுடன் கணவன் தொழிலை நடத்திவரும் மேரி பாராட்டுக்குரியவரே!

இதையும் படிங்க...சிலம்பம் சுற்றி நோபல் புக் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த மாணவிகள்

Last Updated : Feb 15, 2021, 4:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.