ETV Bharat / city

செல்போன் கடையில் கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சி... - trichy mobile shop theft attempt cctv footage

திருச்சி துறையூர் அருகே கண்ணனூரில் ஏற்கனவே கொள்ளை போன மொபைல் கடையில் இரண்டாவது முறையாக திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளன.

திருச்சி துறையூரில் ஒரே கடையில் தொடர் திருட்டு-வெளியான சிசிடிவி காட்சிகள்

author img

By

Published : Jun 16, 2022, 11:38 AM IST

திருச்சி:தி துறையூர் அருகே காளியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் கண்ணனூரில் சொந்தமாக மொபைல் கடை நடத்தி வருகிறார். கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி இவருடைய மொபைல் கடையின்் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மூன்று மொபைல் போன்கள் பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

இதுதொடர்பாக பெருமாள் ஜம்புநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் அவருடைய கடையின் பூட்டை உடைக்க திருடர்கள் முயற்சி செய்தபோது அருகில் டீக்கடையில் உறங்கிக் கொண்டிருந்தவர் பூட்டு உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்து அவர்களை விரட்ட முயன்ற போது இரண்டு திருடர்கள் பின்பக்க வழியாக குதித்து தப்பிக்கும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

திருச்சி துறையூரில் ஒரே கடையில் தொடர் திருட்டு-வெளியான சிசிடிவி காட்சிகள்

இதேநாளில் அருகில் இருந்த பேக்கரி கடை ஒன்றில் உள்ளே புகுந்த திருடர்கள் கல்லாவில் இருந்த 2000 ரூபாயை திருடிச் சென்றனர். கண்ணனூர் பகுதியில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.முன்னதாக இதே ஜம்புநாதபுரத்தில்தான் ராணுவவீரர் மனைவியின் செயின் பறிப்பு சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Online loan App scams:ஆன்லைன் லோன் செயலி மோசடியில் சிக்கத் தவிக்கவேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.