திருச்சி மன்னார்புரத்தில் எல்ஃபின் என்ற பெயரில் தனியார் எம்எல்எம் நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் ரியல் எஸ்டேட், பொருட்கள் பரிமாற்றம் உள்ளிட்டவைகளை எம்எல்எம் திட்ட முறையில் மேற்கொண்டுவருகிறது.
இங்கு தினமும் பல கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துவந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, இந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜாவின் காரில் அரியலூருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் பிடிபட்டது. மேலும் இந்தப் பணம், தன்னுடையது என்று ராஜா ஒப்புக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து அவரது நிறுவனம், வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மே 21ஆம் தேதி இரண்டாவது கட்டமாக அவரது எம்எல்எம் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.