திருச்சி: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கரோனா வழிகாட்டுநெறிமுறைகளுடன் தேர்தலுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.
முன்னதாக, தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜன.28ஆம் தேதி முதல் பிப்.4ஆம் தேதி வரை நடைபெறும். பிப். 5ஆம் தேதி வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். பிப்.7ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம் என்று தெரிவித்தது. அதன்படி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டுவருகின்றன.
இதனிடையே வேட்பு மனுத்தால் செய்ய வரும் வேட்பாளர்கள் கூட்டமாக வருவதாக புகார்கள் எழுந்தன. அதனால் நகராட்சி அலுவலர்கள், கரோனா தொற்று காரணமாக வேட்பு மனுத்தாக்கல் செய்யவருவோர், முன்மொழிய ஒருவருடன் வந்தால் மட்டுமே போதுமானது என்று தெரிவித்துள்ளனர்.
இதனை மீறும் விதமாக திருச்சி மாநகராட்சி 57ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் நகர்புறவளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் உதவியாளரான முத்துச்செல்வம் 100க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் மனுதாக்கல் செய்யவந்துள்ளார். மனுத்தாக்கல் செய்யும்போது 10 பேருடன் அலுவலகத்துக்குள் நுழைந்தார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தேர்தல் பணி; தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது - உயர் நீதிமன்றம்