திருச்சி பெரிய கடை வீதி வெள்ளை வெற்றிலை காரத் தெருவில் கோட்டை மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு இரண்டாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் ஒரு கை சுற்று போட்டியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். குழந்தைகள் பிரிவில் ஒரு நிமிடத்திற்கு 130 முறை ஒரு கையை சுற்றி புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவரது சாதனை நேபால் எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான சான்றிதழ் சாய்னாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சாதனை படைத்த மாணவி சாய்னா ஜெட்லியை, கோட்டை மாநகராட்சிப் பள்ளி தலைமை ஆசிரியை ரெஹ்னா பேகம் வாழ்த்தினார்.
இது குறித்து சாய்னாவின் தந்தை டிராகன் ஜெட்லீ கூறுகையில், "8, 9ம் வகுப்பு மாணவ மாணவிகள் பிரிவில் ஒரு கை சுற்றும் போட்டியில் 140 முறை சுற்றிதே உலக சாதனையாக உள்ளது. குழந்தைகள் பிரிவில் தற்போது சாய்னா ஜெட்லி ஒரு நிமிடத்தில் 130 முறை சுழற்றி உலக சாதனை படைத்துள்ளார். இது நேபாள எவரெஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது" என்றார்.