ETV Bharat / city

முறையான பாதையின்றி அவதிப்படும் வாக்காளர்கள்

திருச்சி: மணிகண்டம் வாக்குச்சாவடி மையத்திற்கு முறையான பாதை இல்லாததால் வாக்காளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குப்பதிவு

author img

By

Published : Dec 27, 2019, 11:43 AM IST

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய ஆறு ஊராட்சி ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்றுவருகிறது. இதற்காக ஆறு ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 938 வாக்குப்பதிவு மையங்களில் மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 771 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் 90 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளிக்குடி ஊராட்சி வாக்காளர்களுக்காக மணிகண்டத்திலுள்ள மான்யத் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 67ஆவது வாக்குச்சாவடியான இங்கு எட்டாவது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த வாக்குச்சாவடி மையத்தில் 373 ஆண் வாக்காளர்கள், 411 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 784 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மணிகண்டம் வாக்குச்சாவடி மையத்தில் முறையான பாதையின்றி வாக்காளர்கள் அவதி

ஆனால், இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே செல்வதற்கு முறையான பாதை இல்லாமல் வாக்காளர்கள் அவதிப்பட்டுவருகின்றனர். வாக்களார்கள் கரடுமுரடான பாதையைக் கடந்துதான் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் இதனால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாக்குச்சாவடிக்கு வந்து செல்வதற்கான போதுமான வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்குப்பதிவு

மேலும் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள 68ஆவது வாக்குச்சாவடி மையத்தில் ஒன்பதாவது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்துவருகின்றனர். இங்கு முதல் முறையாக வாக்களித்த கோமதி என்பவர், "முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வாக்குச் சீட்டுக்களை பயன்படுத்தி வாக்களித்தேன். இதேபோல் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க:

மக்களுக்காக எதை வேண்டுமானால் தியாகம் செய்ய தயார் - நாரயணசாமி!

Intro:திருச்சி அருகே மணிகண்டம் வாக்குச்சாவடி மையத்திற்கு முறையான பாதை இல்லாததால் வாக்காளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். Body:
திருச்சி:
திருச்சி அருகே மணிகண்டம் வாக்குச்சாவடி மையத்திற்கு முறையான பாதை இல்லாததால் வாக்காளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, திருவெறும்பூர், வையம்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக 6 ஊராட்சி ஒன்றியங்களிலும் 938 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 90 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. வாக்குப்பதிவை கண்காணிக்க 5 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 4,000 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினரும், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மொத்தம் 5 லட்சத்து 18 ஆயிரத்து 771 வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். வாக்குச்சீட்டு அடிப்படையில் இன்று வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் அமைதியான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குகளை திருச்சி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான சிவராசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.
இந்த வகையில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் பகுதியில் கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி காண வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்காக மணிகண்டம் மான்யத் தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 87வது எண் வாக்குச்சாவடியான இங்கு 8வது வார்டுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இங்கு மொத்தம் 784 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 373 பேர் ஆண்கள் 411 பேர் பெண்கள். இந்த வாக்குச்சாவடி மையம் திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே செல்வதற்கு முறையான பாதை இல்லாமல் வாக்காளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சுமார் 5 அடி உயர ரோடில் இருந்து கரடு முரடான பாதையை கடந்து தான் வாக்குச் சாவடிக்கு செல்ல வேண்டியுள்ளது. முதியவர்கள் பெண்கள் என அனைவரும் இதனால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். முதியவர்கள் துணை ஒருவரின்றி வாக்குச் சாவடிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. முதியவர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து செல்வதற்கான எவ்வித பத்திய வசதிகளும் செய்து கொடுக்கப்பட வில்லை. அதே போல் இங்கு வந்து மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கவும் போதுமான வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது .இது வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.