திருச்சி: மணப்பாறை காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (48). இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஒளியமங்கலம் சந்தைக்கு பொரி மூட்டையோடு சென்றுள்ளார். அப்போது புதுகாலனி என்ற இடத்தில் எதிரே வந்த கார் ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஜெயக்குமார் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மணப்பாறை காவல்துறையினர் விரைந்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் கார் ஓட்டுனரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கார் ஓட்டுனர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் ரவிச்சந்திரன் (50) மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், இரு சக்கர வாகனத்தில் சென்றவர் அணிந்திருந்த தரமற்ற தலைக்கவசம் விபத்தின் போது உடைந்து நொறுங்கியதாலே அவர் தலையில் காயம் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபல திரைப்பட விமர்சகர் கௌசிக் மாரடைப்பால் மரணம்