ETV Bharat / city

திருச்சி கோட்டையைக் கைப்பற்றியது திமுக கூட்டணி! - திருச்சி கோட்டையை கைப்பற்றியது திமுக கூட்டணி

திருச்சி: அனைத்து ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது.

DMK alliance
DMK alliance
author img

By

Published : Jan 12, 2020, 1:25 PM IST

திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், தாத்தையங்கார்பேட்டை, வையம்பட்டி, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, துறையூர், உப்பிலியாபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றுக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்ய டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. 14 ஒன்றியங்களிலும் திமுக உறுப்பினர்களே அதிகம் வெற்றி பெற்றனர். இதேபோல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான 24 இடங்களில் 19 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. 5 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 3ஆவது வார்டில் வெற்றி பெற்ற தர்ம ராஜேந்திரன் ஒருமனதாக திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை ஆட்சியர் சிவராசு வழங்கினார். இதேபோல் அந்தந்த ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணி வென்றது. அதன்படி...

ஒன்றியத் தலைவர் துணைத் தலைவர்
அந்தநல்லூர் துரைராஜ் வனிதா
மணிகண்டம் கமலம் கருப்பையா புவனேஸ்வரி
திருவெறும்பூர் சத்யா சண்முகம்
தாத்தையங்கார்பேட்டை ஷர்மிளா மல்லிகா
வையம்பட்டி குணசீலன் ஸ்ரீவித்யா
மருங்காபுரி பழனியாண்டி சரோஜா
முசிறி மாலா ரமேஷ் பாபு
மண்ணச்சநல்லூர் ஸ்ரீதர் செந்தில்குமார்
லால்குடி ரவிச்சந்திரன் முத்துச் செழியன்
புள்ளம்பாடி ரஸியா கனகராஜ்
துறையூர் சரண்யா புவனேஸ்வரி
உப்பிலியாபுரம் ஹேமலதா கலைச்செல்வி
தொட்டியம் புனிதா ராணி சத்தியமூர்த்தி
மணப்பாறை அமிர்தவல்லி ------------
DMK alliance

ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகள் அனைத்துக்கும் திமுகவைச் சேர்ந்தவர்களே பதவியேற்றனர். தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.

இதையும் படிங்க: திமுகவிற்கு துரோகம் செய்த காங்கிரஸ் வேட்பாளர்

Intro:அனைத்து ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது. Body:திருச்சி:
அனைத்து ஒன்றியக்குழு, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிகளையும் திமுக கைப்பற்றியது.
திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர், மணிகண்டம், திருவெறும்பூர், தாத்தையங்கார்பேட்டை, வையம்பட்டி, மருங்காபுரி, முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய கடந்த 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதில் 14 ஒன்றியங்களிலும் திமுக.வை சேர்ந்தவர்களே கவுன்சிலர்களாக அதிகம் வெற்றி பெற்றனர். இதேபோல் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான 24 இடங்களில் 19 இடங்களை திமுக மற்றும் காங்கிரஸ் கைப்பற்றின. 5 இடங்களை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் பதவிகளை திமுக எளிதாக கைப்பற்றும் சூழல் உருவானது. இதையடுத்து இன்று காலை திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் 3 வது வார்டில் வெற்றி பெற்ற தர்ம ராஜேந்திரன் ஒருமனதாக திருச்சி மாவட்ட ஊராட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சிவராசு வழங்கினார். இதேபோல் அந்தந்த ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அந்தநல்லூர் ஒன்றிய தலைவராக துரைராஜ், துணைத் தலைவராக வனிதா, மணிகண்டம் ஒன்றிய தலைவராக கமலம் கருப்பையா, துணைத்தலைவராக புவனேஸ்வரி, திருவரம்பூர் ஒன்றிய தலைவராக சத்யா, துணைத் தலைவராக சண்முகம், தாத்தையங்கார்பேட்டை ஒன்றிய தலைவராக ஷர்மிளா, துணைத்தலைவராக மல்லிகா, வையம்பட்டி ஒன்றிய தலைவராக குணசீலன், துணைத் தலைவராக ஸ்ரீவித்யா, மருங்காபுரி ஒன்றிய தலைவராக பழனியாண்டி, துணைத்தலைவராக சரோஜா, முசிறி ஒன்றிய தலைவராக மாலா, துணைத்தலைவராக ரமேஷ் பாபு, மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவராக ஸ்ரீதர், துணைத்தலைவராக செந்தில்குமார், லால்குடி ஒன்றிய தலைவராக ரவிச்சந்திரன், துணைத்தலைவராக முத்துச் செழியன், புள்ளம்பாடி ஒன்றிய தலைவராக ரஸியா, துணைத் தலைவராக கனகராஜ், துறையூர் ஒன்றிய தலைவராக சரண்யா, துணைத்தலைவராக புவனேஸ்வரி, உப்பிலியாபுரம் ஒன்றிய தலைவராக ஹேமலதா, துணைத்தலைவராக கலைச்செல்வி, தொட்டியம் ஒன்றிய தலைவராக புனிதா ராணி, துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி, மணப்பாறை ஒன்றிய தலைவராக அமிர்தவல்லி துணைத் தலைவர் பதவி அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் ஒன்றியக்குழு மற்றும் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகள் அனைத்துக்கும் திமுகவை சேர்ந்தவர்கள் பதவியேற்றுள்ளனர். துணைத் தலைவர் பதவியை 12 இடங்களில் திமுக பதவியேற்றுள்ளது. ஒரு இடத்தில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி பதவியேற்றுள்ளது. ஒரு துணைத் தலைவர் பதவி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சான்றிதழ்களை வழங்கினர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.