ETV Bharat / city

'வெளி வட்டச்சாலை... வேளாண் நிலத்தை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்'

author img

By

Published : Mar 8, 2021, 7:53 PM IST

திருச்சி: வெளிவட்டச்சாலை அமைப்பதால் 13 குளங்கள் பாதிக்கப்படும் எனவும், இதனால் பணிகளுக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவில், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை செயலாளர்கள், திருச்சி ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகள்
வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகள்

திருச்சி மாவட்டம் மேலப்பேட்டை சின்னத்துரை, திருவரம்பூர் தண்டாயுதபாணி, உறையூர் நடராஜன் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தனர்.

அந்த மனுவில் அவர்கள், "தற்போது திருச்சி மாவட்டம் கரூர்-திருச்சி, தஞ்சாவூர்-நாகப்பட்டினம், திருவாரூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 67இல் வெளி வட்டச்சாலை அமைக்கும் பணி நடந்துவருகிறது.

வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகள்
வெளி வட்டச்சாலை அமைக்கும் பணிகள்
இதனால் திருச்சி மாவட்டம் அண்டநல்லூரிலிருந்து பஞ்சப்பூர் வரை உள்ள 17 கிலோமீட்டர் பகுதியும், பஞ்சப்பூர் முதல் துவாக்குடி வரை 26 கிலோமீட்டர் தூரத்தில் இந்த வட்டச்சாலை அமைக்கப்பட்டுவருகிறது.
இந்த வட்டச்சாலை மதுரை-ராமேஸ்வரம், மதுரை-திருச்சி வட்டச் சாலைகளையும் இணைக்கும் வகையில் பணி நடந்துவருகிறது.
13 குளங்கள், நீராதாரங்கள் பாதிக்கப்படும்

இதனால், இந்தப் பகுதிகளிலுள்ள பஞ்சப்பூர், சாத்தனூர், பெரியகுளம், கணக்கன் குளம், ஓலையூர், கம்பங்குடி, சூரியூர், பழங்கனாங்குடி, துவாக்குடி பெரியகுளம் உள்ளிட்ட 13 குளங்கள், நீராதாரங்கள் பாதிக்கப்படும் இடர் உள்ளது.

வேளண்மைக்கு ஆபத்து

இப்பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நடந்துவரும் வேளாண்மையும் பாதிக்கப்படும் இடர் உள்ளது. எனவே வெளி வட்டச்சாலை அமைக்கும் பணியை நிறுத்திவைத்து வேளாண் பணிகள் பாதிக்காத வகையில் சாலை அமைக்கும் பணியைச் செய்ய வேண்டும் என அலுவலர்களுக்கு மனு அளித்தோம்.

ஆனால் அலுவலர்கள் இந்த மனுவை பரிசீலிக்காமல் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். எனவே இந்தப் பணிகளுக்குத் தடைவிதிக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

விசாரணை ஒத்திவைப்பு

இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.