ETV Bharat / city

திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு! - Trichy Arun Hotel

திருச்சி: திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு அளித்துள்ளது.

தமிழக மக்கள் முன்னனி பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் முன்னனி பொதுச்செயலாளர்
author img

By

Published : Mar 16, 2021, 7:54 PM IST

திருச்சியில், தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பொழிலன், இன்று (மார்ச் 16) செய்தியாளர்களிடம் பேசினார். மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பொழிலன் கூறுகையில், 'மத்திய பாஜக அரசு, மொழி மாநில உரிமைகளை நசுக்குகிறது. வேளாண் மண்டலத்தை பாதிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களை திணிக்கிறது. மதங்களின் பெயரில் உறவையும், உழவர்களையும் அடிமைப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் கனிம வளங்களை சூறையாடுவது, சாலை, சுங்கவரி, வணிக ஜிஎஸ்டி என்கிற பெயரில் தமிழ்நாடு மக்களிடையே வழிப்பறி கொள்ளையடிக்கிறது.

தமிழக மக்கள் முன்னனி பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் முன்னணி பொதுச்செயலாளர்

தமிழ்நாட்டு அடையாளங்கள் குழிதோண்டிப் புதைப்பு

நீட் நுழைவுத் தேர்வு வழி, எளிய மக்களின் உயர்கல்வி வழித்தடத்தை அடைகிறது. இட ஒதுக்கீட்டை ஒழித்திடும் நோக்கத்திலேயே செயல்படுகிறது. தமிழ் மொழியின் பயன்பாட்டை தடுக்கும் வகையில் இந்தி, சமஸ்கிருத திணிப்பு நடக்கின்றன.

ஆளுநர் மூலம் தமிழ்நாட்டு அடையாளங்களை குழிதோண்டிப் புதைத்து, இதுபோன்ற எண்ணற்ற வகையில் செயல்படும் பாஜக இன்றைய தமிழர்களின் முதல் எதிரியாக கருதப்படுகிறது. அதனால் தமிழ்நாட்டிலிருந்து, பாஜகவை விரட்டியடிப்பது முதல் பணியாகும்.

அதேபோல் பாஜகவுக்கு எடுபிடி வேலைகள் செய்யும் அதிமுக, அதன் கூட்டணி கட்சிகளை எதிர்த்து தோல்வியடையச் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாஜக, அதிமுகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்கும் வகையில் செயல்படும் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி, ஒவைசியின் கட்சி உள்ளிட்ட கட்சிகளையும் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆகையால் திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய பொதுவுடமைக் கட்சி, மார்க்சிய பொதுவுடமை கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகள் பாஜகவின் பாசிச போக்குகளை எதிர்த்து வருவதால், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இந்தக் கூட்டத்தில், தாளாண்மை உழவர் இயக்கம் திருநாவுக்கரசு, நீரோடை நிலவன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன், தமிழர் உரிமை இயக்க ரமேசு, வழக்கறிஞர் பானுமதி, குழந்தை ஈசுவரன், தபெதிக மாநகரத் தலைவர் வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.