ETV Bharat / city

மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

author img

By

Published : Dec 5, 2019, 7:23 AM IST

திருச்சி: மாவட்ட அணிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் நேற்று தொடங்கியது.

hockey, மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்
hockey

திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சை உள்பட 27 மாவட்டங்களைச் சேர்ந்த சீனியர் ஆடவர் அணிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி நேற்று திருச்சியில் தொடங்கியது. இதனை திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். யூனிபைட் திருச்சி மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் காதர் முகைதீன், செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் இந்த போட்டிகளை நடத்துகின்றனர்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் ஜமால் முகமது கல்லூரியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானங்களில் நடைபெறும் இந்தத்தொடரில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 33 போட்டிகள் லீக் சுற்றிலும், எஞ்சியுள்ள போட்டிகள் காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி மற்றும் மூன்றாம் நான்காம் இடங்களுக்கான போட்டிகளாகவும் நடைபெறுகிறது.

மாநில அளவிலான ஹாக்கி போட்டிகள் தொடக்கம்

முதல் நாளான நேற்று ராமநாதபுரம் - திருப்பூர், தூத்துக்குடி - கிருஷ்ணகிரி, தஞ்சை - சேலம் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிகள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றன. ஜமால் முகமது கல்லூரியில் நடந்த போட்டியில் சிவகங்கை - சென்னை அணியும், கோவை - திருவண்ணாமலை அணிகளும் மோதின. இந்த ஹாக்கி போட்டிகள் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

Intro:27 மாவட்ட அணிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது. Body:
திருச்சி:
27 மாவட்ட அணிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி திருச்சியில் இன்று தொடங்கியது.
திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சை உள்பட 27 மாவட்டங்களைச் சேர்ந்த சீனியர் ஆடவர் அணிகள் கலந்து கொள்ளும் மாநில அளவிலான ஹாக்கி போட்டி இன்று திருச்சியில் தொடங்கியது. திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் மற்றும் ஜமால் முகமது கல்லூரியில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் இந்த போட்டிகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
போட்டிகளை திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். யூனிபைட் திருச்சி மாவட்ட ஹாக்கி சங்க தலைவர் காதர் முகைதீன், செயலாளர் நாகராஜன் உள்ளிட்டோர் இந்த போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
வரும் 8ம்தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறுகிறது. மொத்தம் 41 போட்டிகள் நடைபெறுகிறது. இதில் 33 போட்டிகள் லீக் போட்டிகள் ஆகும். 4 கால் இறுதிப் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள், ஒரு இறுதிப் போட்டி மற்றும் 3, 4ஆம் இடங்களை முடிவு செய்வதற்கான மற்றொரு அரை இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று ராமநாதபுரம்- திருப்பூர் அணியும் மோதின. தூத்துக்குடி- கிருஷ்ணகிரி அணையும், தஞ்சை- சேலம் அணியும் மோதின.
ஜமால் முகமது கல்லூரியில் நடந்த போட்டியில் சிவகங்கை- சென்னை அணியும், கோவை- திருவண்ணாமலை அணிகளும் மோதின. போட்டிகள் தொடர்ந்து 8ம்தேதி வரை நடைபெறுகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.