திருச்சி: தண்டுவடம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சங்க திருச்சி மாவட்ட பொறுப்பாளர் குரு ராமகிருஷ்ணன் தலைமையில் 40 நோயாளிகள் சக்கர நாற்காலியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். அவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், தண்டுவடம் பாதிப்பை அரசு காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கன்னியாகுமரி: நாகர்கோவிலில், தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பினர் சார்பில் ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம்: தண்டுவடம் காயமடைந்த மாற்றுத்திறனாளிகளை பல்வகை மாற்றுத்திறனாளியாக அறிவிக்க வேண்டும், மருத்துவ செலவு உதவி தொகையை 1500லிருந்து 5000 ரூபாயாக மாற்றி தர வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், கல்வி தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தகுதியான நபர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
பெரம்பலூர்: சுயதொழில் தொடங்க வட்டி இல்லாத மானியத்துடன் வங்கிக் கடன் உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதையும் படிங்க...முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்