திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் பெருமாள் கோயிலில் வைகுண்ட எகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கியது. முதலாவதாக பகல்பத்து வைபவம் 10 நாள்கள் நடைபெற்றது.
இந்தப் பகல்பத்து வைபவத்தில், உற்சவரான நம்பெருமாள், தினமும் அதிகாலையில் மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.
பகல்பத்து வைபவத்தைத் தொடர்ந்து, 25ஆம் தேதி அதிகாலை, ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ராப்பத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைபவத்தின் பத்து நாள்களும், உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.
இதனைத் தொடர்ந்து வேடுபரி, திருகைத்தரி சேவை, தீர்த்தவாரி, நம்மாழ்வார் மோட்சம் என முக்கிய நிகழ்வுகளுடன் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி ஜனவரி 4ஆம் தேதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
வைகுண்ட ஏகாதசி வைபவத்தில் நம்பெருமாள் ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குச் சேவை சாதித்த புகைப்படங்களின் தொகுப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தென்னங்கன்று நட குழி தோண்டியபோது பழங்கால சிலைகள் கண்டெடுப்பு!