ETV Bharat / city

'சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் விடுதலை செய்க' - சீமான் கண்டனம் - நாதக

திருச்சியில் சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நால்வரை காவல் துறை கைதுசெய்திருப்பது கண்டிக்கத்தக்கது எனவும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

சாட்டை துரைமுருகன் கைது
சாட்டை துரைமுருகன் கைது
author img

By

Published : Jun 12, 2021, 7:22 AM IST

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று (ஜூன் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மறைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து, புரிதல் ஏற்படுத்தி காவல் துறை முன்னிலையில் மறுப்பு காணொலி வெளியிடவைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் சந்தோஷ் என்ற மகிழன், மாநிலக் கொள்கைப் பரப்புரையாளர் திருச்சி சரவணன் ஆகியோரை காவல் துறை திடீரென கைதுசெய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி

மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும்வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து, அவருக்குப் புரிதலை ஏற்படுத்தி காவல் துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொலி வெளியிடச் செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு.

இதை மாபெரும் குற்றம் எனக்கருதி, கட்சிக்காரர்களைக் கைதுசெய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல்.

சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல் துறை கைதுசெய்துள்ள நாதகவைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்" எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் மோடியைச் சந்திக்கும் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.