ETV Bharat / city

காவிரி ஆற்றில் மணல் அள்ள தந்த அனுமதியை அரசு ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை - காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை

திருச்சி: காவிரி ஆற்றில் மணல் அள்ளலாம் என்ற ஆய்வுக் குழுவின் பரிந்துரையை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலகத்திற்கு பேரணியாக வந்தனர்.

Protest again permitting for sand fetch
author img

By

Published : Sep 27, 2019, 10:51 PM IST

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது. காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இன்னும் மூன்றாண்டுகளுக்கு மணல் அள்ள அனுமதிக்கலாம் என்று ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. இதை நிராகரிக்க வலியுறுத்தி திருச்சி மிளகுபாறையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலத்திற்கு இன்று பேரணியாக வந்தனர்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலர் இந்திரஜித் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசின் அனுமதியோடு மூன்றடி ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி அளவுக்கதிகமாக 30 அடி ஆழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றை நம்பி செயல்பட்டுவரும் கூட்டுக் குடிநீர் திட்டங்களில் நீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் பாசன ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பாசனத்திற்கான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பேரணி சென்ற விவசாயிகள்

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். மேலும், காவிரி, கொள்ளிடம் ஆற்றில் மூன்று ஆண்டுகளுக்கு மணல் அள்ளலாம் என்று குழு பரிந்துரையை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு குழுவின் பரிந்துரை அறிக்கையை நிராகரிக்க வேண்டும். காவிரியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: மணல் கடத்தல்: சிங்கம் பட பாணியில் லாரிகளை மறித்த நாமக்கல் எம்பி!

Intro:காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ளலாம் என்ற ஆய்வுக் குழுவின் அனுமதியை தமிழக அரசு நிராகரிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.Body:

திருச்சி:
காவிரி, கொள்ளிடத்தில் மணல் அள்ளலாம் என்ற ஆய்வுக் குழுவின் அனுமதியை தமிழக அரசு நிராகரிக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.

காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மேலும் மூன்றாண்டுகளுக்கு மணல் அள்ள அனுமதிக்கலாம் என்று ஆய்வுக் குழுவின் பரிந்துரை செய்துள்ளது. இதை நிராகரிக்க வலியுறுத்தி திருச்சி மிளகுபாறையில் உள்ள கம்யூனிஸ்ட்
கட்சி அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சி அலுவலத்திற்கு இன்று பேரணியாக வந்தனர்.

அப்போது, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் துணைச் செயலாளர் இந்திரஜித் செய்தியாளர்களிடம் பேசுகையில், காவிரி, கொள்ளிடம் அறுகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் அமைதியோடும், அனுமதி இல்லாமலும் 3 அடி ஆழம் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி அளவுக்கதிகமாக 30அடி அழத்திற்கு மேல் மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி, கொள்ளிடம் ஆகியவற்றை நம்பி செயல்பட்டுவரும் கூட்டு குடிநீர் திட்டங்களில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு பாசன ஆறுகள் மற்றும் கால்வாய்கள் பாசத்திற்கான தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். மேலும், காவிரி, கொள்ளிடம் ஆற்றில் 3 ஆண்டுகளுக்கு மணல் அள்ளலாம் என்ற குழு பரிந்துரையை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு குழுவின் பரிந்துரை அறிக்கையை நிராகரிக்க வேண்டும். காவிரியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றார்.Conclusion:தமிழக அரசு குழுவின் பரிந்துரை அறிக்கையை நிராகரிக்க வேண்டும். காவிரியில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.