ETV Bharat / city

கோவை தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வந்தால் வரவேற்போம் - அமைச்சர் அன்பில் மகேஷ் - கோவை தனியார் பள்ளி மாணவர்கள்

கோயம்புத்தூரில் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் அரசுப் பள்ளிக்கு வந்தால் வரவேற்கிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

author img

By

Published : Nov 18, 2021, 7:28 PM IST

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆசிரியர்கள் பணிமாறுதல் கலந்தாய்வு தொடர்பான விதிமுறைகள் அடுத்தவாரம் இறுதி செய்யப்படும். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிப்போம்.

சிறுபான்மையினர் பள்ளிகளிலுள்ள ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்து வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கான நியாயமான நீதி கிடைக்கும்.

பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு நஷ்ட ஈடு

சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளிகள் நவம்பரில் தான் திறக்கப்பட்ட நிலையில் பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அடுத்தாண்டு எப்போதும்போல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் படிப்படியாக இது தளர்த்தப்படும்.

திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை விளை நிலங்களில் பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்டுள்ளது. பாதிப்பு இருக்கும் பட்சத்தில் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பர் 19ஆம் தேதி குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு தினம் அன்று சென்னையிலுள்ள பள்ளியில் நிகழ்வு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விழிப்புணர்வு வகுப்புகள்

இதில் குழந்தைகளுக்கு பாதுகாப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட உள்ளோம். ஏற்கனவே அரசுப் பள்ளிகளில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் பள்ளி ஆசிரியர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், தனியார் பள்ளிகளில் இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

ஆகையால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்ட பிறகு இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தோம். ஆனால், கோயம்புத்தூரில் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வு காரணமாக நவம்பர் 19ஆம் தேதியே பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளோம்.

அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்கிறோம்

பாடத்திட்டங்கள் எனச் சொல்வதை காட்டிலும் முதல் நாள் பள்ளி தொடங்கும்போதே மாணவர்களுக்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

மழை காரணமாக பல்வேறு அரசுப் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில், ஏற்கனவே பள்ளிகளின் நிலை குறித்து கேட்டுள்ளோம். மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்த ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம். அதற்கேற்றார் போல் பள்ளிகளில் உரிய வசதி மற்றும் புதிய கட்டடம் கட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி

தனியார் பள்ளிகளில் இதுபோன்று நடைபெற்றாலும் தடுப்பது குறித்தும் நடவடிக்கை குறித்தும் நவம்பர் 19 நடைபெறும் நிகழ்வில் தெரிவிக்க உள்ளோம். கோயம்புத்தூர் பாலியல் குற்றசாட்டுக்குள்ளான தனியார் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்குச் செல்ல விரும்பும், எத்தனை மாணவர்களாக இருந்தாலும் அரசுப் பள்ளிக்கு வந்தால் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'விஜய் வரிகட்டாமல் ஏமாற்றுகிறார், சூர்யா இரட்டை வேடம் போடுகிறார்'- கொதிக்கும் அர்ஜுன் சம்பத்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.