திருச்சி: புதுக்கோட்டை சாலையில் உள்ள எம்ஐடி சோதனைச்சாவடியில் நேற்று முன்தினம் (20.06.2022) வாகன சோதனையின்போது காரிலிருந்து பயங்கர ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கில் முக்கிய குற்றவாளியாக வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கேகேஎஸ்.செல்வகுமார் தேடப்படும் நபராக திருச்சி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
![தேடப்படும் நபராக செல்வகுமார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tri-wantedaccustomedselvakumar-7210723_22062022142021_2206f_1655887821_989.jpg)
கேகேஎஸ்.செல்வகுமார் கடந்த மாதம் திருச்சியில் தமிழர் தேசிய கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு - ஏற்பாடுகள் தீவிரம்