ETV Bharat / city

போலி மதுபான தொழிற்சாலை விவகாரம் - இரு போலீசார் பணியிடை நீக்கம்

போலி மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் கவனக் குறைவாக இருந்ததாக கூறி திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர், மணிகண்டம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

ஆய்வாளருக்கு ஆப்பு... ஏட்டுக்கு பூட்டு
ஆய்வாளருக்கு ஆப்பு... ஏட்டுக்கு பூட்டு
author img

By

Published : Apr 19, 2022, 11:39 AM IST

திருச்சி: மணிகண்டம் அருகே நாகமங்கலம் செட்டியாபட்டியில் சிலர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு போலி மதுபானம் தயாரிப்பதாக மத்திய புலனாய்வு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய புலனாய்வு பிரிவினரும், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையிலான தனிப்படையினரும் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

அங்கு சுமார் 450 லிட்டர் மதுபானங்களும், 10,000 காலி மதுபான பாட்டில்கள், 20 கேன்களில் எரிசாராயம், 50 ஆயிரம் பாட்டில் மூடிகள், போலி லேபிள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 5 பேரை பிடித்த மத்திய புலனாய்வு பிரிவு மற்றும் மாவட்ட தனிப்படையினர் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். .

ஆய்வாளருக்கு ஆப்பு... ஏட்டுக்கு பூட்டு

இந்நிலையில் போலி மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் கவனக் குறைவாக இருந்ததாக கூறி திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் மீராபாய், மணிகண்டம் தனிப்பிரிவு தலைமைக் காவலர் சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கஞ்சா விற்பனையில் இறங்கிய காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.