ETV Bharat / city

சாக்கடையில் வீசப்பட்ட பிரதமர் மோடியின் படம்! - சாக்கடையில் வீசப்பட்ட பிரதமர் மோடியின் படம்

திருச்சியில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்க முயன்ற விவகாரத்தில் திமுக மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோடியின் படத்தை இளைஞர் ஒருவர் சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்தவர் அளித்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மோடி
மோடி
author img

By

Published : Apr 20, 2022, 6:55 PM IST

திருச்சி நகரின் பொன் நகர் பகுதியிலுள்ள ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் படத்தை வைப்பது குறித்து அப்பகுதியில் உள்ள பாஜக மற்றும் திமுகவினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதன் ஒரு பகுதியாக இன்று (ஏப்.20) பாஜகவினர் மற்றும் திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது திமுகவினர் தாக்கியதாகக் கூறி, பாஜகவின் மண்டலத்தலைவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திருச்சி ரேஷன் கடையில் பிரதமர் மோடியின் உருவப் படம் வைப்பதில் தகராறு

ரேஷன் கடையில் மோடி படம் வைக்க எதிர்ப்பு: திருச்சி கன்டோன்மென்ட் பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம் தலைமையிலான பாஜகவினர், பொன் நகர் பகுதியில் உள்ள அமராவதி கூட்டுறவு ரேஷன் கடையில், பிரதமர் மோடி படத்தை வைத்தனர். அப்போது ரேஷன் கடையில் நின்றிருந்த பொதுமக்கள் சிலரும், 55ஆவது வார்டு கவுன்சிலர் ராமதாஸ் மற்றும் திமுகவினரும் மோடி படத்தை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், பிரதமர் மோடி படம் கீழே விழுந்து நொறுங்கியது.

சாக்கடையில் வீசப்பட்ட பிரதமர் மோடியின் படம்: கீழே விழுந்து கிடந்த மோடி படத்தை, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் எடுத்து, சாக்கடையில் வீசி எறிந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்குச் சென்ற போலீஸ் உதவி கமிஷனர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

அமராவதி கூட்டுறவு ரேஷன் கடை
அமராவதி கூட்டுறவு ரேஷன் கடை

சாக்கடை கால்வாயில் படத்தைத் தேடியபோது, சாக்கடைக்குள் படம் இல்லை. அதனால், போலீசார் பாஜகவினரிடம் புகார் பெற்று, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவினர் தாக்கியதாகக் கூறி, பாஜக மண்டலத் தலைவர் பரமசிவம், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: அம்பேத்கர் சிலைக்கு மாலையிடும்போது விசிக - பாஜக மோதலால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.