திருச்சி: மணப்பாறை அடுத்த மொண்டிபட்டியில் இயங்கிவரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை அலகு இரண்டில் பணிபுரியும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு கடந்த மாதம் (அக்-13) கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆலை நிர்வாகம் ஊதிய உயர்வு அளிக்காததால் ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த கோரி இன்று பணிக்கு செல்வதை புறக்கணித்து ஆலையின் நுழைவாயிலில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உழைப்பிற்கு பலனில்லை
கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்தவித ஊதிய உயர்வும் வழங்காததை கண்டித்தும், பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
புகார்
இதுகுறித்து ஆலை நிர்வாகம்,கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியாளர்கள்,துணை தொழிலாளர் ஆணையர்,மேலாண்மை இயக்குனர், உள்ளிட்டோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கண்ணீர் மல்க சர்க்கரை ஆலை ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்