திருச்சி: திருச்சி மணப்பாறை அருகே திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தின் மீது மினி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற சக்திவேல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற மேலும் இருவர், படுகாயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓய்வு பெற்ற பேராசிரியரிடம் ரூ.2 லட்சம் திருட்டு - சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை