ETV Bharat / city

மணப்பாறை அருகே காணாமல்போன இளம்பெண் கிணற்றில் சடலமாக கண்டெடுப்பு - woman suicide

திருச்சி: மணப்பாறை அருகே மாயமான இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்டகப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம்பெண் கிணற்றில் சடலமாக மீட்பு
author img

By

Published : Aug 7, 2019, 2:12 AM IST

Updated : Aug 7, 2019, 9:24 AM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பாரதியார் நகரைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (27). இவருக்கும் மேட்டுக்கடையைச் சேர்ந்த நாகஜோதி (24) என்பவருக்கும், ஐந்து ஆண்டிற்கு முன்பு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தங்கபாண்டியன் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு தன் குடும்பத்தை பார்க்க வந்தார்.

இந்நிலையில் நேற்று தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விடச்சென்ற நாகஜோதி வீடு திரும்பவில்லை. இது குறித்து நாகேஜாதியின் தாயார் வள்ளி கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வந்தநிலையில், உடையாப்பட்டியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் நாகேஜாதி சடலமாக மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்களுடன் சென்ற காவல்துறையினர், நாகஜோதியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கிணற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த நாகஜோதியின் இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்குப் பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போன நிலையில், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றில் சடலமாக மிதக்கும் இளம்பெண்

Intro:
மணப்பாறை அருகே காணாமல் போன இரண்டு குழந்தைகளின் தாய் மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மிதந்ததால் பரபரப்பு - போலீசார் விசாரணை.Body:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள பாரதியார் நகரை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (27) இவருக்கும் மேட்டுக்கடையை சேர்ந்த நாகஜோதி (24) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவருக்கும் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கபாண்டியன் மும்பையில் உள்ள பிரபல நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஊருக்கு வந்துள்ளார்.

நேற்று தனது குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விடச்சென்ற நாகஜோதி வீடு திரும்பவில்லை. இது குறித்து நாகேஜாதியின் தாயார் வள்ளி கொடுத்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் உடையாப்பட்டியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் நாகேஜாதி சடலமாக மிதப்பதாக வந்த தகவலையடுத்து, மணப்பாறை போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் நாகஜோதியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கிணற்றின் அருகே நிறுத்தப்பட்டிருந்த நாகஜோதியின் இரு சக்கர வாகனத்தையும் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் நாகஜோதியின் கணவர் தங்கபாண்டியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளின் தாய் காணாமல் போன நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
Last Updated : Aug 7, 2019, 9:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.