கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் ஏழைத் தொழிலாளர்கள் விவசாயிகள் எனப் பலரும் வருவாய் இன்றி தவித்தனர்.
இதையொட்டி ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் வளர்மதி நிவாரண உதவிகளை வழங்கினார். அரிசி, காய்கறி, மளிகைப்பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அவர் செய்துவந்தார்.
தற்போது கரோனா ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று ஸ்ரீரங்கம் தொகுதிக்குள்பட்ட சோமரசம்பேட்டை, அல்லித்துறை, நாடார் சத்திரம், கேகே நகர், சவேரியார் புரம், வீரய்யநல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மக்களுக்கு 5 கிலோ அரிசி தொகுப்பை இன்று அமைச்சர் வளர்மதி வழங்கினார்.
தகுந்த இடைவெளியுடனும், முகக்கவசம் அணிந்துகொண்டும் மக்கள் அவற்றை வாங்கிச் சென்றனர்.
இந்நிகழ்ச்சியில், மணிகண்டம் ஒன்றியச் செயலாளர் ஜெயக்குமார், புங்கனூர் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திக், முன்னாள் ஊராட்சி செயலாளர் முத்தையன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கரன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் திருப்புகழ் செல்லத்துரை, எட்டரை குணா, சோமரசம்பேட்டை 3ஆவது வார்டு உறுப்பினர் சிவகாமி, நவநீதன், கே.கே. நகர் கிளைச் செயலாளர் பகலவன், நாச்சிகுறிச்சி ஊராட்சி செயலாளர் கண்ணன், வைரவேல், முன்னாள் ஊராட்சித் தலைவர் சத்திரப்பட்டி அன்பு, இனியானூர் பரமசிவம், அருண் தேவா, வீரய்யன்நல்லூர் முத்துவீரன், ரவி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.