ETV Bharat / city

திருச்சியில் உலக புத்தக பெருவிழா! - அமைச்சர் கே.என்.நேரு

இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துளளார்.

உலக புத்தக பெருவிழா
உலக புத்தக பெருவிழா
author img

By

Published : Apr 25, 2022, 6:35 AM IST

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரி வளாகத்தில் இன்று (ஏப்.24) பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'உலக புத்தகப் பெருவிழா' நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில், "இல்லம் தேடி கல்வி " திட்டத்தின் கீழ் ஆயிரம் மையங்களுக்கு நூலகம் அமைப்பதற்காக ரூபாய் 10 இலட்சம் மதிப்பிலான புத்தகங்களை வழங்கினார்கள்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இல்லம் தேடி கல்வி திட்டம் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக உள்ளது. அதற்கு இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள் மிக முக்கியக் காரணம். அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருப்போம். பள்ளி மேலாண்மை குழுவிற்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இடங்களில் இல்லம் தேடி கல்வி திட்ட மையங்கள் செயல்படுகிறது. அனைத்து இடங்களிலும் சிறிய அளவிலான நூலகங்களை அமைக்கப்படும்" என்றார்.

திருச்சியில் நடந்த 'உலக புத்தகப் பெருவிழா'

அடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "எந்த வித எதிர்பார்பும் இல்லாமல் செயல்படுபவர்கள் தான் தன்னார்வலர்கள். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சிறப்பாக செயல்படுகிறார்கள். நன்கு படித்தவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்; ஆனால், நாங்கள் படிக்காதவர்கள். பள்ளிகளில் சாலை, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்படும்" என்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'ஆசிரியர்-மாணவர் இடையிலான உறவு மேம்பட, மாணவர்களுக்கு உரிய ஆலோசனை வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி கல்வி துறை அதிகாரிகள், இல்லம் தேடி கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கான உதவி எண்கள் வகுப்பறையில் ஒட்டப்படும் - அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.