ETV Bharat / city

குடிநீர் கேட்டு மா.கம்யூ கட்சியினர் ஆர்ப்பாட்டம் - water scarcity

திருச்சி: மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்ட விடத்திலாம்பட்டி கிராமத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, நகராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Jun 19, 2019, 3:51 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்டது விடத்திலாம்பட்டி கிராமம். இங்குள்ள ஒன்றாவது வட்டத்திற்கு முறையாகக் குடிநீர் வராததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மலைப்பகுதியான காந்தி சாலையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருவது, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றை சீரமைத்துத் தருவது போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிக்கு குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி அமைத்திடுதல், கிழக்குப் பகுதியில் தேங்கி உள்ள சாக்கடை நீரை உடனடியாக சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி பொறியாளரிடம் இது தொடர்பான கோரிக்கை மனுவை அளிக்கப்பட்டது.

Intro:குடிநீர் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

Body:திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்கு உட்பட்டது விடத்திலாம்பட்டி. இங்குள்ள 1 வது வார்டு பகுதிக்கு முறையாக குடிநீர் வராததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் மலைப்பகுதியான காந்தி சாலையில் ஆழ்துளைக் கிணறு அமைத்து தருவது, ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறை
சீரமைத்து தருவது, தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிக்கு குடிநீர் வசதி,தெருவிளக்கு வசதி அமைத்திடுதல்,கிழக்குப் பகுதியில் தேங்கி உள்ள சாக்கடை நீரை உடனடியாக சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் நகராட்சி அலுவலகத்தில் உள்ள நகராட்சி பொறியாளர் இதுகுறித்து மனுவையும் அளித்துள்ளனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.