ETV Bharat / city

குழுமாயி அம்மன் கோயில் குட்டிகுடி விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்சியில் வெகுவிமரிசையாக பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோயிலில் நடந்த குட்டிகுடி திருவிழாவில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

குட்டிக்குடி திருவிழா
குட்டிக்குடி திருவிழா
author img

By

Published : Mar 10, 2022, 8:21 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் புத்தூரில் புகழ்பெற்ற குழுமாயி அம்மன் கோயில் உள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குட்டிகுடி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதேபோல, இத்திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ரத்தத்தை மருளாடி குடித்து அதன் பின்னர், மருளாடி பக்தர்களுக்கு அருளாசி வழங்குவது மிகச் சிறப்பு.

குட்டிகுடி திருவிழா

இந்த கடந்த பிப்.26ஆம்தேதி குட்டிகுடி திருவிழாவானது, காப்புக் கட்டப்பட்டு, மார்ச் 6ஆம் தேதி காளியாட்டத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிகுடி நிகழ்ச்சி மார்ச் 10ஆம் தேதியான இன்று நடைபெற்றது.

விமரிசையாக நடைபெற்ற குட்டிகுடி திருவிழா

நிகழ்ச்சியில் கோயிலுக்கு பக்தர்களால் வேண்டுதலுக்காகவும், கொடையாகவும் வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஆடுகள் மந்தைக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு அம்மன் அருள்பெற்ற மருளாடி சிவக்குமார் ஆக்ரோஷமாக ஆடி, ஆட்டின் கழுத்துப் பகுதிகளை கடித்து ரத்தத்தைக் குடித்த பின்னர், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

நேர்த்திக்கடன்

முன்னதாக குழுமாயி அம்மனுக்கு விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன. அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் வழங்கப்பட்ட ஆடுகளை மருளாடி கடித்து, அதன் ரத்தத்தை குடித்தார்.

இதில் திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இதையும் படிங்க: 'விரைவில் திராவிட குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டப்படும்' - அண்ணாமலை விமர்சனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.