ETV Bharat / city

கணவர் பேசாததால், மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்! - Kallanai NearLady died

தஞ்சாவூர்: கல்லணை அருகே இளம்பெண் ஒருவர், கணவர் தன்னுடன் பேசவில்லை என்ற காரணத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீவைத்துக் கொண்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.

கல்லணை
கல்லணை
author img

By

Published : Feb 6, 2021, 11:50 AM IST

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது:

கல்லணை அருகே திருச்செனம்பூண்டி புது பாலத்தைச் சேர்ந்தவர் சரத்பாபு, இவரது மனைவி தங்கம் (31). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஏழு மாதத்தில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டதில் தங்கம் தனது அம்மா வீட்டில் சென்று இருந்துள்ளார். இந்நிலையில் இரு வீட்டிலும் பேச்சுவார்த்தை நடத்தியதின்பேரில் திருச்செனம்பூண்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் கணவர் சரத்பாபு பேசவில்லை என்றும், இதனால் மன வருத்தத்தில் இருந்த தங்கம் கடந்த 4ஆம் தேதி மண்ணெண்ணெய் எடுத்து ஊற்றி தீ வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்தவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து தங்கத்தின் அண்ணன் கங்காதரன் தோகூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால் தஞ்சை ஆர்டிஓ விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் கார் மோதி விபத்து: கூலித் தொழிலாளி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.