ETV Bharat / city

நூற்றாண்டை கடந்த இஸ்லாமிய பெண்கள் பள்ளி! - வைகவுண்டஸ் கோஷன் முஸ்லிம் மகளிர் மேல்நிலைப்பள்ளி

திருச்சி: நூற்றாண்டை கடந்தும் இஸ்லாமிய பெண்களின் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டுக்காக செயல்பட்டு வரும் கோஷன் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு.

school
school
author img

By

Published : Feb 3, 2021, 7:50 PM IST

இஸ்லாமிய பெண்களின் கல்வியை மனதில் வைத்து பிரிட்டிஷ் அரசால் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் உள்ள வைகவுண்டஸ் கோஷன் முஸ்லிம் மகளிர் மேல்நிலைப்பள்ளி. மிகவும் பழமை வாய்ந்த இப்பள்ளி, பந்தேகானா என்றும் கோஷா பள்ளிக்கூடம் என்றும் அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. இங்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உருதுபாடம் கட்டாயமாகவும், ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை மும்மொழி கல்வியும் கற்பிக்கப்படுகிறது.

சிறப்பாக கல்விப்பணியாற்றி வந்த கோஷன் பள்ளி, ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் பெருகியதாலும், ஆங்கிலம் பயின்றால்தான் எதிர்காலம் என்ற நம்பிக்கையில் உருது மொழிவழிக்கல்வி பயில ஆர்வம் குறைந்ததாலும் நாளடைவில் நலிவடைய தொடங்கியது. ஒரு கட்டத்தில் பள்ளிக்கூடத்தையே மூட அரசு நினைத்தது. ஆனால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரின் பெருமுயற்சியால், இன்றும் இப்பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தங்கள் பெண் பிள்ளைகளை இங்கு படிக்கவைப்பதை பெற்றோரும் பெருமையாக கருதுகின்றனர்.

நூற்றாண்டை கடந்த இஸ்லாமிய பெண்கள் பள்ளி!

திருச்சி, சென்னை என இரு இடங்களில் மட்டுமே இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு இங்கு வெறும் 2 மாணவிகள் மட்டுமே பயின்றுள்ளனர். பின்னர் பல்வேறு முயற்சிகளுக்குப்பின் 2018 ஆம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, மாணவிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து, தற்போது 512 இஸ்லாமிய மாணவிகள் பயின்று வருகின்றனர். ஆனால், இங்குள்ள கட்டடங்கள் 110 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்பதால் அரசு இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்துதர வேண்டும் எனக் கோரிக்கை வைக்கிறார் தலைமை ஆசிரியரான இந்திராணி.

தலைமுறைகளாக படித்து வரும் திருச்சிக்கு பெருமை சேர்க்கும் இந்த வைகவுண்டஸ் மகளிர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, இன்னும் பலநூறு ஆண்டுகள் கல்விப்பணியில் தனது சிறப்பான பங்களிப்பை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

இதையும் படிங்க: சுற்றுச்சூழலுக்கு உகந்த பந்தய வகை சூப்பர் இ-பைக்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.