திருச்சி: மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு கட்டடத்தின் பின்புறத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது.
இதனால் சந்தேகமடைந்த தொழிலாளர்கள் கீழே சென்று பார்த்தபோது, தடுப்புச் சுவரையொட்டிய தரையில் பெண் குழந்தை ஒன்று தனியாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவமனை செவிலியர் மற்றும் ஊழியர்கள் குழந்தையை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
மருத்துவமனையின் உள்புறம்,வெளிப்புறம் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் இரண்டு நுழைவுவாயிலில் உள்ள செக்யூரிட்டிகளை மீறி மருத்துவமனை வளாகத்தில் பெண் குழந்தையை விட்டுச் சென்றது யார்? என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்ட ஒன்றிய அரசு நிராகரித்த அலங்கார ஊர்திகள்