திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சுக்காம்பட்டியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியானது கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இன்றி இது நாள் வரை மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழுவதற்கான ஆபத்தான நிலையில் உள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், "நீர்த்தேக்கத் தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அருகிலுள்ள அங்கன்வாடி மையம் அல்லது அரசு மேல்நிலைப்பள்ளி மீது விழுவதற்கான அபாயம் உள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதான தொட்டியை அகற்றி புதிய தொட்டியை மாற்றித் தர வேண்டும். இதில் நகராட்சி அலுவலர்கள் அலட்சியம் காட்டினால் தங்கள் பிள்ளைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பப் போவதில்லை" என தெரிவித்துள்ளனர்.