திருச்சி: அனுமன் ஜெயந்தி விழா நாடெங்கிலும் உள்ள அனுமன் ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் பிரசித்தி பெற்ற கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடைபெற்று தங்கவசம் அணிவிக்கப்பட்டு, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.
மேலும், ஒரு லட்சத்து எட்டு வடைகளாலான வடை மாலையும், பத்தாயிரத்து எட்டு ஜாங்கிரிகள் கொண்ட ஜாங்கிரி மாலையும் சாற்றப்பட்டு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா மூன்றாவது அலை தொடங்கியது- அமைச்சர் மா. சுப்பிரமணியன்