துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நிஜாம் முஹைதீன் (23) என்பவர் ரூ. 3.66 லட்சம் மதிப்புள்ள 96 கிராம் தங்கத்தை செயின் வடிவில் மறைத்து எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல் சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த லட்சுமி (33) என்பவரிடமிருந்து ரூ.3.41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ. 7.07 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை பறிமுதல் செய்த அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: