திருச்சி: வையம்பட்டி அடுத்த திம்மனூர் குளத்து பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக வையம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் சேவல் சண்டை நடத்தியதாக பூசாரிப்பட்டியை சேர்ந்த தினேஷ் (20), சங்கர் (20), தவளைவீரன்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் (30), மத்தகோடாங்கிபட்டியைச் சேர்ந்த ஜெயராம் (37), உள்ளிட்ட ஐந்து பேரை பிடித்தனர். மேலும், அவர்களிடமிருந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் சேவல் சண்டை பந்தயத்திற்காக உபயோகப்படுத்தப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஐந்து பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வரி ஏய்ப்பை தடுக்க சுற்றும் படை குழுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பு