அமைச்சர்கள் மாலை அணிவிப்பு
பெரும்பிடுகு முத்தரையர் 1,346ஆவது பிறந்தநாள் இன்று (மே 23) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் சாஸ்திரி சாலையில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் அன்பழகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, கதிரவன், பகுதிச் செயலாளர்கள் கண்ணன், காஜாமலை விஜி, இளங்கோ உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்யநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டப்பேரவை உறுப்பினர் பழனியாண்டி உள்ளிட்டப் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து முத்தரையர் சமூக அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பின்னர், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டப் பலரும் சிலைக்கு மாலை அணிவித்தனர்.
அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
மேலும், திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கு.ப. கிருஷ்ணன், திருச்சி புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி, முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் பத்மநாபன் உள்பட ஏராளமான அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: மாநில அரசு இடங்களில் சேர்வதற்கு நீட் கிடையாது!